Class Central is learner-supported. When you buy through links on our site, we may earn an affiliate commission.

e-சுவாசத் தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பு

via OpenWHO

Overview

]1தீவிர சுவாசத் தொற்றுப் பரம்பலுக்கு (ARIs); பதிலளிப்பைக் காண்பிக்கும் எல்லா நபர்களுக்கும் வினைத்திறனுள்ள பதிலிறுப்பைக் காண்பிப்பதற்கான அடிப்படை அறிவும் திறமைகளும் இருப்பது அவசியம். (ARIs) என்பவை என்ன, எவ்வாறு அவை தொற்றுகின்றன, தொற்றிற்கான ஆபத்தினை மதிப்பீடு செய்வது எப்படி மற்றும் தம்மைப் பாதுகாப்பதற்கான அடிப்படை சுகாதார நடவடிக்கைகள் போன்றவற்றைப் அவர்கள புரிந்து கொள்ளுதல்; அவசியம். இக்கற்றல் பொதியானது பதிவிறக்கம் செய்யப்படக்கூடிய காணொளிகளையும் முன்வைப்புக்களையும் கொண்ட நான்கு கற்றல் கையேடுகளை உள்ளடக்குகிறது.

Syllabus

Course information

இந்த பாடநெறி பின்வரும் மொழிகளிலும் கிடைக்கிறது:

English- français - Bahasa Indonesia - русский - Português - 中文 - Español - العربية - Tiếng Việt - বাংলা - Shqip - македонски - Tetun - Polski - සිංහල - ภาษาไทย -Казақ тілі

கண்ணோட்டம்: இப் பயிற்சி நெறியானது தீவிர சுவாசத் தொற்றுக்களுக்கான (ARIs) பொதுவான அறிமுகத்தினையும் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்குரிய அடிப்படை சுகாதார நடவடிக்கைகளையும் வழங்குகிறது. இப்பயிற்சியின் முடிவில், உங்களால் (ARIs) பற்றிய அடிப்படைத் தகவல்களை விளக்கக் கூடியதாகவும் அவை என்ன, எவ்வாறு தொற்றுகிறது என்பதையும் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான அடிப்படை சுகாதார நடவடிக்கைகளை பட்டியலிடவும் முடியும். பயிற்சியின் முடிவில் வினாக்கள் வழங்கப்படும்.

கற்றல் குறிக்கோள்: தீவர சுவாசத் தொற்றுக்களின் அடிப்படைக்கொள்கைகளைப் புரிந்து கொள்ளுதல், தொற்றிற்கான ஆபத்தினை மதிப்பீடு செய்தல் மற்றும் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான அடிப்படை சுகாதார நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ளுதல்.

பயிற்சிக் காலம்: அண்ணளவாக இரண்டு மணித்தியாலங்கள்.

தேர்வுக்குப்: பிந்தைய சோதனைக்கு குறைந்தபட்சம் 80% பெறும் பங்கேற்பாளர்களுக்கு சாதனைக்கான பதிவு வழங்கப்படும். வாசலில் சந்திக்க வரம்பற்ற முயற்சிகள் உள்ளன.வழங்கப்படும். சாதனைக்கான பதிவைப் பெறும் பங்கேற்பாளர்கள் இந்த பாடத்திட்டத்திற்கான திறந்த பேட்ஜையும் பதிவிறக்கம் செய்யலாம். எப்படி என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Acute Respiratory Infections -April 2020 எனும் பயிற்சி நெறி திறந்த WHO இணையத்திலிருந்து தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இம்மொழிபெயர்ப்பின் உள்ளடக்கத்திற்கும் அதன் துல்லியத்தன்மைக்கு WHO பொறப்பேற்க மாட்டாது. ஆங்கிலத்திற்கும் தமிழ் மொழிபெயர்ப்பிற்கும் முரண்பாடுகள் காணப்படுமிடத்து ஆங்கில மொழிமூலமே அதிகாரபூர்வமானதாக கருதப்பட வேண்டும்.

Course contents  
  • கையேடு 1: பொது சுகாதார சம்பந்தமான தீவிர சுவாசத் தொற்றுக்களுக்கள் (ARIs)-அறிமுகம்: பொதுவான கற்றல் குறிக்கோள்: தீவிர சுவாசத் தொற்றுக்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை விளக்குதல், அதன் பரம்பல், அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு பற்றியவை.
  • கையேடு 2: தீவிர சுவாசத் தொற்றுக்களிலிருந்து(ARIs)எவ்வாறு பாதுகாப்பது: பொதுவான கற்றல் குறிக்கோள்: ஆபத்தினை வரையறுத்தல், எப்போது எவ்வாறு ஆப்த்தினை மதிப்பீடு செய்வது மற்றும் (ARIs) ன் ஆபத்தினை எவ்வாறு நிர்வகிப்பது.
  • கையேடு 3: அடிப்படை சுகாதார நடவடிக்கைகள்: பொதுவான கற்றல் குறிக்கோள்: (ARIs)லிருந்து பர்துகாப்பதற்கான அடிப்படை சுகாதார நடவடிக்கைகளை விபரித்தல்.
  • கையேடு 4: மருத்துவ முகமூடி அணிதல்: பொதுவான கற்றல் குறிக்கோள்: எப்போது எவ்வாறு மருத்துவ முகமூடி அணிய வேண்டும் என்பதை விபரித்தல்.

Reviews

Start your review of e-சுவாசத் தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பு

Never Stop Learning.

Get personalized course recommendations, track subjects and courses with reminders, and more.

Someone learning on their laptop while sitting on the floor.