இக்கற்கை நெறியானது எந்த வகையான அமைப்புகள் புதிய கொரோனா போன்ற வெளிப்பட்டு வரும் சுவாச வைரசுகள் தொடர்பாக செயற்படுவதற்கு முன் ஆயத்தப்படுத்தப்படல் வேண்டும் என்பது தொடர்பாகவும், நோய்த்தொற்று ஏற்பட்டதன் பின்னர் அதனை எவ்வாறு இனங்காண்பது மற்றும் சுகாதார ஊழியர்களிற்கு/ நோயாளிகளுக்கு அல்லது சுகாதாரத்துறையுடன் தொடர்புபட்ட ஏனையவர்களிற்கு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு எவ்வாறு IPC முறைகளினைப் பயன்படுத்துதல் வேண்டும் என்பன தொடர்பாகவும் விளக்கம் அளிக்கின்றது.
இக் கற்கை நெறியானது கிருமித் தொற்றில் இருந்து முற்பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு என்பவற்றினை நோக்காகக் கொண்டிருப்பதனால், இக்கற்கை நெறியானது சுகாதார சேவை பணியாளர்களிற்காகவும், பொதுச் சுகாதார சேவையாளர்களிற்காகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 2020 முதல் இந்தப் பாடநெறி புதுப்பிக்கப்படவில்லை. மிகச் சமீபத்திய வழிகாட்டுதலுக்கு, பாடத்தின் ஆங்கிலப் பதிப்பைப் பார்க்கவும்.